ஏப்போது சந்திப்பேன்?
உன்னை தேடும் போது,
மொட்டாய் ஒழிந்தாய்.
உன்னை கண்டபோது,
அழகாய் மலர்ந்தாய்... மறைந்தாய்!
தொலைவிலிருந்து ஏங்குகிறேன் - உனக்காய்,
வாழ்கின்றேன்...
மறுபடி மலர்வாய் என!
கற்றாய் உலாவினேன்,
வண்ணமலரே, உன் அருகே.
நதியாய் ஓடினேன்,
வெண்கடலே, உன்னை சந்திக்க.
சூழ்நிலையால்,
தொலைத்தூரம் சென்றேன்...
உன்னை காணாமல் தவிக்கிறேன்!
- சாம் ஷாரோன்
Comments
Post a Comment