Posts

அழகிழந்த பூக்கள் 🥀

மரங்களில் பூத்து குலுங்கும் பூக்களே - உங்களை தொலைவில் கண்டு இரசித்தேன் - ஆனால் அருகில் வந்தப்போதோ மிதித்தேன் - மரத்தில் நீ இருந்தால் அழகு - கீழே விழுந்தால் நீ குப்பைக்கே குடும்பம் என்னும் கிளையில் - நாம்  இருக்கும் வரை அழகு  பிரிந்த நொடிப் பொழுதே - நாம் நமது அழகை இழக்கிறோம்

நான் !

பிறந்தேன், வளர்ந்தேன் - சேர்ந்தேன் பள்ளியில், படித்தேன், முடித்தேன். கல்லூரியில் சேர்ந்தேன் - மறந்தேன்  வாழ்கையை, பின்னர், தெரிந்தேன், புரிந்தேன். கண்கள் ஈர்த்தது - மறுத்தேன், என்னை அறிய, புரிய. ஓடுகிறேன், பின்னோக்கி என்னை தேடி - கண்டடைவேன் வென்றிடிவேன்.                                                        - சாம் ஷாரோன்

Quotes

1. "All is fake, but God is real in this fake world." - Sam Sharon 

ஏப்போது சந்திப்பேன்?

உன்னை தேடும் போது, மொட்டாய் ஒழிந்தாய். உன்னை கண்டபோது, அழகாய் மலர்ந்தாய்... மறைந்தாய்! தொலைவிலிருந்து ஏங்குகிறேன் - உனக்காய், வாழ்கின்றேன்...  மறுபடி மலர்வாய் என! கற்றாய் உலாவினேன், வண்ணமலரே, உன் அருகே. நதியாய் ஓடினேன், வெண்கடலே, உன்னை சந்திக்க. சூழ்நிலையால், தொலைத்தூரம் சென்றேன்... உன்னை காணாமல் தவிக்கிறேன்!                                                        - சாம் ஷாரோன்